தஞ்சையில், அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
- அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
தஞ்சாவூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்கு னர்கள், எம். ஆர் .பி. செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், ரவிச்சந்திரன், முருகன், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு ஆரம்பம் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்த லைவர் ரவிச்சந்திரன் பேரணியை தொடக்கி வைத்தார்.
மாவட்டச் செயலாளர் ரங்கசாமி கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார்.
இந்த பேரணியானது பனகல் கட்டிடத்தில் முடிவடைந்தது.
இதில் மாநில செயலாளர் ஹேமலதா நிறைவுரை ஆற்றினார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
இதில் ஏராளமான நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.