குமுளி அருகே நாய்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட மானுக்கு தீவிர சிகிச்சை
- தோட்டத்துக்குள் வனப்பகுதியில் இருந்து வழி தவறிவந்த மான் புகுந்தது. இதனை அங்கிருந்த நாய்கள் விரட்டி கடித்தது.
- சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை தேக்கடி கால்நடை பராமரிப்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கூடலூர்:
குமுளி அருகே அணைக்கரைப்பகுதியை சேர்ந்தவர் பென்னி. இவரது தோட்டத்துக்குள் வனப்பகுதியில் இருந்து வழி தவறிவந்த மான் புகுந்தது. இதனை அங்கிருந்த நாய்கள் விரட்டி கடித்தது.
இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் நாய்களை விரட்டி மானை காப்பாற்றினர். இது குறித்து தேக்கடி வனத்துறையின ருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை தேக்கடி கால்நடை பராமரிப்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை யினர் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மானை நாய்கள் விரட்டி கடித்தது. பொதுமக்கள் நாய்களை விரட்டி மானை மீட்டனர். அந்த மானுக்கு கால்நடை பராமரிப்பு மையத்தில்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 2 நாட்கள் மான் பராமரிக்கப்பட்டு உடல்நிலை சீரானதும் பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றனர்.