கன்னியாகுமரியில் சாலை ஓரம் தங்கி இருந்த நரிக்குறவர்களுடன் தூங்குவது போல் நடித்து பொருட்களை திருடிய வாலிபர்
- போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
- கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நேற்று முதலே கன்னியாகுமரியில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.
இந்த சீசனை யொட்டி கன்னியா குமரியில் வெளி மாநில வியாபாரிகளும் ஏராளமான சீசன் கடை களை வைத்து உள்ள னர். இதற்கிடையில் நரிக்குற வர்களும் கன்னியாகுமரியில் சாலையோரம் தங்கி இருந்து ஊசி மற்றும் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
இவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு நேரங்களில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சாலை ஓரமாக படுத்து தூங்குவது வழக்கம். அவ்வாறு நேற்று இரவு நரிக்குறவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபம் அருகே சாலையோரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூங்குவது போல் நடித்து அவர்கள் வைத்திருந்த பாசி மாலைகள் மற்றும் பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்த நரிக்குற வர்கள் கூச்ச லிட்டனர். பின்னர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்ப தால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.