உள்ளூர் செய்திகள்

குளச்சல் பகுதியில் மது போதையில் வாகனங்கள் ஓட்டியவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2023-11-01 07:42 GMT   |   Update On 2023-11-01 07:42 GMT
  • வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு
  • மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்

குளச்சல் :

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தங்கராமன் அறிவுரைப்படி குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், சிதம்பரதாணு, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் கள் சுரேஷ்குமார், பாலசெல்வன் உள்ளிட்ட போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 4 நாட்களில் குளச்சல், கருங்கல், இரணியல், தோட்டியோடு பகுதியில் நடத்திய வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மது குடித்து வாகனம் ஓட்டிய டிரைவர்கள், இரணியல் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி அமீர்தீன் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். அவர், வழக்குகளை விசாரித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்

Tags:    

Similar News