உள்ளூர் செய்திகள்

பரக்காணியில் ஆற்று கரையோரம் தடுப்பு சுவர் அமைக்கப்படும்

Published On 2022-08-09 07:51 GMT   |   Update On 2022-08-09 07:51 GMT
  • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
  • தேங்காப்பட்டணத்தில் ஆறும் கடலும் கலக்கும் பகுதியில் தற்போது மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி:

தேங்காப்பட்டணத்தில் ஆறும் கடலும் கலக்கும் பகுதியில் தற்போது மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்துக்காக கடலும் ஆறும் சேரும் கழிமுக பகுதியில் உள்ள இயற்கை மணல் திட்டுகள் அழிக்கப்பட்டதால் வறட்சி காலங்களில் கடல் நீர் எளிதில் ஆற்று நீருடன் கலந்து ஆற்று நீர் உப்பு நீராக மாறியதுடன் கரையோர பகுதி குடி நீர் கிணறுகள் உப்பு நீராக மாறியது. அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்தில் 80 சதவீத மக்கள் பயன்படுத்துகின்ற குழித்துறை ஆற்றில் உள்ள பல குடிநீர் கிணறுகளில் உப்பு நீர் புகுந்ததால் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உப்பு கலந்த குடிநீர் குடிக்கும் துயரநிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் கரை யோரப்பகுதி குடிநீர் கிணறுகள் மற்றும் ஆற்றில் உள்ள குடி நீர்திட்ட கிணறுகளை பாதுகாக்க பரக்காணியில் தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நபார்டு திட்டம் ரூ.16 கோடியில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கல் தடுப்பணையின் மறு பகுதியான ஈழகுடி விளாகம் பகுதியில் இருந்த பல வீடுகளும், ஆற்றின் கரை பகுதிகளும் சரிந்து விழுந்தது.

மேலும் அடுத்துள்ள கணியம்விளை, மரப்பாலம், கலிங்கராஜபுரம் போன்ற கிராமங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் தடுப்பணையின் மறுபகுதியிலும் மண் போட்டு நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது வரையிலும் நிரப்பாத காரணத்தால் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தடுப்பணை யில் மறுபுறம் வழியாகவும் ஆற்றுநீர் பாய்ந்து கொண்டி ருக்கிறது. தண்ணீர் இப்படி திசைமாறி சென்றால் வைக்கல்லூர் கிராமமே தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் பணி நிறைவடைந்த பரக்காணி தடுப்பணையை பார்வையிட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வந்திருந்தார். அந்த பகுதியை பார்வை யிட்ட பின்னர் அவர் கூறியதாவது:-

பரக்காணியில் தற்போது தடுப்பணை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தடுப்பணையின் மறுபகுதி யில் வெள்ள பெருக்கினால் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்ததின் பேரில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க முதல்கட்ட ஆய்வு பணிகள் நடந்தது. அடுத்த கட்டமாக மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கால தாமதமின்றி அந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்படும். மேலும் கரையோரப்பகுதி குடி நீர் கிணறுகளை பாதுகாக்கும் வகையில் முஞ்சிறை அருகே மங்காடு பகுதியில் மேலும் ஒரு தடுப்பணை அமைப்பதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். நிகழ்ச்சியில் வட்டார தலைவர் வழக்கறிஞர் பால்ராஜ், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செய லாளர் ஜோர்தான், மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது மற்றும் ரகுபதி, லாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News