மேலும் 1,40,000 விண்ணப்பங்கள் வீடு வீடாக கள ஆய்வு
- ஊழியர்கள் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு
- குமரியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் வீடுகளில் ஆய்வு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு இருந்தது. முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.
முதல் கட்ட முகாமில் 2,03,268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்டமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்தது. இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கி உள்ள னர். குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக் கவில்லை. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சில குளறுபடிகள் இருப்பது தெரி யவந்துள்ளது. இதையடுத்து அவற்றை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
70,000 விண்ணப்பங்கள் ஆய்வு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பெரும்பாலான விண்ணப் பங்களில் உள்ள குளறுபடி கள் சரி செய்யப்பட்டது. 10 சதவீத விண்ணப்ப படி வங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்ப படி வங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விண்ணப்ப படிவங்களையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கான ஆய்வு பணி தற்போது தொடங்கப் பட்டுள்ளது. வீடு வீடாக சென்று அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு பணியை தொடங்கி உள்ள னர். ஒவ்வொரு ரேஷன் கடைகள் உட்பட்ட பகுதிகளிலும் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கள ஆய்வு பணியை முடிப்பதற்கு இன்னும் தாமதமாகலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கள ஆய்வுக்கு வரும் ஊழியர்கள் விண்ணப்ப தாரர்களிடம் பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் விண்ணப்பித்த 50 சதவீத விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள விண்ணப் பங்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த விண்ணப்ப படிவங்களை சென்னை யில் உள்ள மின் ஆளுமை மையத்தில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கள ஆய்வு மேற்கொண்டு வரும் விண்ணப்ப படிவங்களை அடுத்த கட்டமாக அனுப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்னனர்.