பார்வதிபுரம் மேம்பாலத்தில் கொட்டும் மழையில் நடனமாடிய இளம் பெண்கள்
- சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
- வீடியோவிற்கு அந்த இளம் பெண்களின் நண்பர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகரில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை முதலே சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் காலை 10 மணி முதலே அனல் காற்று வீச தொடங்குகிறது. மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கரு மேகங்கள் திரண்டு காணப்படுகிறது. சில நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு லேசான சாரல் மழை பெய்தது. அப்போது பார்வதிபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் அமைந்திருக்கும் பஸ் நிறுத்தம் அருகே கொட்டும் மழையில் பனியன் டி-ஷர்ட் அணிந்த 2 பெண்கள் நடனம் ஆடினார்கள்.இதை பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு அந்த இளம் பெண்களின் நண்பர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.