உள்ளூர் செய்திகள்

கார்கில் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக வந்த காட்சி.

சாணார்பட்டி அருகே கார்கில் வெற்றி தினம்

Published On 2022-07-26 06:54 GMT   |   Update On 2022-07-26 06:54 GMT
  • சாணார்பட்டி அருகே கவராயப்பட்டி கிராமத்தில் தமிழக இளைஞர் பாராளுமன்ற சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப் பட்டது.
  • மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே கவராயப்பட்டி கிராமத்தில் தமிழக இளைஞர் பாராளுமன்ற சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

இதற்கு சமூக ஆர்வலர் பால் தாமஸ் தலைமை தாங்கினார்.நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட அலுவலர் சரண், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் விசுவாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இதில் மாணவ, மாணவிகள் அனைவரும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியவாறு வந்தே மாதரம் என கோசமிட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

நிகழ்ச்சியில் கார்கில் போரின்போது பணியாற்றிய சுபேதார் தங்கவேல், மாறவர்மன் ஆகியோருக்கு சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இதில் இளைஞர் பாராளுமன்ற நிர்வாகிகள் ஜான்போஸ்கோ, கஸ்பார், மோகனா, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News