கொப்பரை தேங்காய் ஏலம் விலை குறைவால் விவசாயிகள் கவலை
- கொப்பரை தேங்காய் ஏலம் விலை குறைவால் கவலையில் விவசாயிகள் அடைந்துள்ளனர்.
- அதிக விலையாக ரூ.78. ஏலம் போனது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்ததுபோக மீதம் உள்ள பருப்பினை யும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
அங்கு கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 800மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப் பட்டுஏலம்விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ 73, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.78. ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோ விற்கு ரூ.4குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதே போல தேங்காய் களுக்காகநடந்தஏலத்தில் சுமார் 9900தேங்காய்கள் ஏலம்விடப்பட்டன.இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலைகுறைந்தவிலையாக ரூ.18, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.23 ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோ விற்கு ரூ.2குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.