உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழக தடகள போட்டிக்கு அரசு கல்லுாரி மாணவர் தேர்வு

Published On 2022-12-30 09:55 GMT   |   Update On 2022-12-30 09:55 GMT
  • பல்கலைக்கழக தடகள போட்டிக்கு அரசு கல்லுாரி மாணவர் தேர்வு செய்யபட்டார்
  • இந்தியா முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்

கரூர்

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் வரும், ஜன., 9 முதல் 13ம் தேதி வரை, 5 நாட்கள் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டி நடக்கிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் தமிழகம் சார்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான கரூர் அரசு கலை கல்லூரி மாணவர் பிரதீப், 800 மீட்டர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர், மாநில தடகள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவர் பிரதீப்பை, கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


Tags:    

Similar News