மங்களநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
- கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது.
- மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.
வேலாயு தம்பாளையம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே கமலாம்பிகை உடனமர் அருள்நிறை மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.
சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தக்குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கமலாம்பிகை உடனமர் அருள் நிறை மங்களநாதர் சாமிகளுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கமலாம்பிகை உடனமர் மங்களநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.