உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.49 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2023-05-20 06:29 GMT   |   Update On 2023-05-20 06:29 GMT
  • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கரூரில் 91.49 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்
  • 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது

கரூர்

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அரசு அறிவித்த இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டனர். மேலும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் வந்து நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவுகளை செல்போன் மூலம் தெரிந்து கொண்டனர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 188 பள்ளிகளை சேர்ந்த 5,891 மாணவர்கள், 5,890 மாணவிகள் என மொத்தம் 11,781 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.இதில் 5,200 மாணவர்கள், 5,579 மாணவிகள் என மொத்தம் 10,779 பேர் தேர்ச்சி பெற்று 91.49 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாண்டு மாணவர்கள் 88.27 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 94.72 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் 87.45 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.39 சதவீத தேர்ச்சியும், தனியார் பள்ளிகளில் 99.1 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 20-வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு 91.49 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கரூர் மாவட்டத்தில் 188 பள்ளிகளில் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 16 அரசு பள்ளிகளும், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 41 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.

Tags:    

Similar News