பாளை சிறைச்சாலையை பார்வையிட்ட சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள்
- சிறைச்சாலை அதிகாரிகள் சிறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர்.
- சிறைச்சாலை பார்வையானது வழக்கறிஞர் தொழில் புரிந்திட மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது என மாணவர்கள் கூறினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் பாளையில் உள்ள மத்திய சிறைச்சாலையினை எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியை எஸ். தங்கப்பழம் சட்டக் குழுமங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆலோசனையின் பேரிலும் தங்கப்பழம் சட்டக் கல்லூரி முதல்வர் ரஜேலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் வெங்கடேஷ் ராஜேஷ்குமார் மற்றும் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் சிறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர். மாணவர்கள் சிறைச்சாலையில் கைதிகளின் செயல்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் தொழில் பற்றி கேட்டறிந்தனர். மேலும் இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த சிறைச்சாலை பார்வையானது வழக்கறிஞர் தொழில் புரிந்திட மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதனை சிறந்த அனுபவமாக கருதுகிறோம் என்றனர்.
இந்த சிறைச்சாலை பார்வையிடலில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியின் 53 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.