இலத்தூரில் தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்
- இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகள் விளக்கி கூறினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் ஆலோசனையின் பேரிலும் மற்றும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை பற்றி தெளிவாக பொதுமக்களிடம் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவ -மாணவிகள் விளக்கி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலட்சுமி செய்திருந்தார்.