உள்ளூர் செய்திகள்

விழாவில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேசிய காட்சி. அருகில் தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தின ராஜா, சி.எஸ்.ஐ. பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், பசுமலை பள்ளி தலைமையாசிரியை மேரி ஜெயசிங், பள்ளி தலைமை ஆசிரியை பார்ச்சூன் பொன்மலர் ராணி, தாளாளர் அருள்தாஸ் ஆகியோர் உள்ளனர்.

இலவச நல உதவிகள்-காலை சிற்றுண்டி திட்டங்கள் விரைவில் அறிவிப்பு

Published On 2023-08-10 07:02 GMT   |   Update On 2023-08-10 07:02 GMT
  • இலவச நல உதவிகள்-காலை சிற்றுண்டி திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
  • இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

மதுரை

மதுரை மங்கலபுரம் பகு–தியில் உள்ள கேப்ரன் ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 188-வது விளை–யாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பி–னரும், கிறிஸ்தவ நல் லெண்ண இயக்க தலைவ–ருமான இனிகோ இருதய–ராஜ் எம்.எம்.எல்.ஏ., தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் மற்றும் ஜெனிவா உலக திருச்சபை மாமன்ற உறுப்பினர் வழக்க–றிஞர் பெர்னாண்டஸ் ரத் தினராஜா மற்றும் மதுரை ராமநாதபுரம் திருமண்டில பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த–னர்.

இதில் சிறப்பு விருந்தின–ராக கலந்து கொண்ட தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தின–ராஜா பேசுகையில், தமிழகத் தில் முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார்.

அரசு பள்ளிகளில் பயி–லும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாண–வர்களுக்கும் வழங்க வேண் டும்.

அதுபோல அரசு பள்ளி–களில் பயிலும் மாணவர்க–ளுக்கு வழங்கப்படும் இல–வச நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி ஆகியவையும் அரசு உதவி பெறும் சிறு–பான்மை பள்ளிகளான கிறிஸ்தவ பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து விரை–வில் இதனை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து தலைமை உரையாற்றிய இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டா–லின், சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, நான் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இலவச நலத்திட்டங்கள் மற்றும் காலை சிற்றுண்டி ஆகிய திட்டங்களை சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசி இருக்கிறேன். எனவே முதலமைச்சர் மு.க.–ஸ்டாலின் இந்த கோரிக்கை–களை விரைவில் நிறை–வேற்றி அதற்கான அறி–விப்பை வெளியிடுவார் என்று உறுதியாக நம்புகி–றேன்.

இவ்வாறு அவர் பேசி–னார்.

இதைத்தொடர்ந்து பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார். விழாவில் பல்வேறு போட்டி–களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பார்ச் சூன் பொன்மலர் ராணி வரவேற்று பேசினார்.

முடிவில் பள்ளி தாளா–ளர் அருள் தாஸ் நன்றி கூறினார். இந்த விழாவில் மதுரை ராமநாதபுரம் திரு–மண்டல முதன்மை பணியா–ளர்கள் மற்றும் போதகர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News