மத்திய சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்
- மத்திய சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும் என புகார் எழுந்துள்ளது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லலூர் ஒன்றி யத்தை சேர்ந்த தெத்தூர், டி.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட கரடிக்கல் அருகில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை யடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி மதுரை மத்தியசிறைச்சாலையை புதியதாக கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் 67ஏக்கர் இடம் தேர்வு செய்துள்ளது.
அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறையினர் வந்தபோது விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சாலைமறியல் போராட்டம் நடத்தி மத்திய சிறைச்சாலை அமைக்க தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தியை யொட்டி கிராமசபைக்கூட்டங்கள் நடந்தது. தெத்தூரில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சீனிவாசனும், டி.மேட்டுப் பட்டியில் நடந்த கூட்டத் திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாம் பழனிச் சாமியும் தலைமை தாங்கி னர்.
இந்த கூட்டங்களில் சிறுமலையடிவாரத்தில் கரடிக்கல் பகுதியில் உள்ள தீர்வை ஏற்பட்ட தரிசு நிலங்களில் கலைஞர் ஆட்சி காலத்தில் ஒருசிலருக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் பட்டா கோரி பல போராட்டங்கள் செய்து வருகின்றனர்.
இந்த மானாவாரிநிலங்களில் 40ஆண்டுகளுக்கு மேலாக மா, கொய்யா, புளி, முருங்கை உள்ளிட்ட பலன் தரும் மரங்களும் பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட தோட்ட பயிர்களும் பருவ மழைக்கு ஏற்றபடி விவ சாயம் செய்து பலனடைந்து வந்தனர். அதனால் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்
பல்லுயிர்களின் வசிப்பிட மான சிறுமலை யிலிருந்து காட்டுமாடு, வரையாடு, காட்டுபன்றி, முள்ளம்பன்றி, செம்பூத்து, தேவாங்கு, குரங்குகள், மலை பாம்பு உள்ளிட்டவை களை பாதுகாக்கவும், சுற்று சூழலலை நிலைப்படுத்தவும் சிறைத்துறை மூலம் சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்காக தேர்வுசெய்துள்ள இடத்தில் சிறைஅமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.