இம்மானுவேல் சேகரனார் நினைவஞ்சலி- தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் செல்ல முடிவு- புதிய தமிழகம் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
- தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது.
- வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செய லாளர் வி.கே.ஐயர், மாநில துணைப்பொதுச்செய லாளர்கள், சுப்பிரமணியன், தேனி பாலசுந்தரராஜ், நெல்லை சிவக்குமார், கிருபைராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
மாவட்ட துணை செய லாளர் மருதன்வாழ்வு ரவி, மாவட்ட துணை செயலாளர் ஆழ்வை பொன் அமிர்தம், குருவை சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கனகராஜ் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் மாபெரும் இயக்கமாக நமது புதிய தமிழகம் கட்சி இருந்து வருகிறது.
வருகிற 11-ந் தேதி தமிழகத்தில் சாதி ஒழிப்பு, சமநீதிக்காக போராடி உயிர் நீத்த சமநீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-வது வீர வணக்க புகழஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி இந்தாண்டிற்கான வீரவணக்க புகழஞ்சலி, வீரவணக்க பேரணி நமது புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறுகிறது.
வீரவணக்க புகழஞ்சலி நிகழ்விற்கு நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50 வாகனம் என குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணி திரண்டு சென்று பங்கேற்றிடவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளாத்திக்குளம் பெருமாள்(தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முக நாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கருங்குளம் ஒன்றிய துணை செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.