பரமத்திவேலூரில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
- தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர்.
- கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்திவேலூரில் உள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பரமத்திவேலூர் 4 ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.