உள்ளூர் செய்திகள்
ஹஜ் பயணத்துக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை- இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் தகவல்
- தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் முதல் மாநிலமாக வரும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
- கடந்த வருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 20 ரூபாய் வாங்கினேன்.
சென்னை:
சென்னை ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபு பக்கர் கூறியதாவது:-
"தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் முதல் மாநிலமாக வரும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. பொங்கல் அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் 10 ரூபாய் வாங்கி இருக்கிறேன். கடந்த வருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 20 ரூபாய் வாங்கினேன். இந்த வருடம் 100 ரூபாய் வாங்கியது மகிழ்ச்சி.
இந்த வருடம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். சென்னையில் இருந்து அனைத்து விமானங்களும் ஹஜ் பயணத்திற்கு இயக்கப்படும். இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லை" என்றார்.