உள்ளூர் செய்திகள்

வாகன தணிக்கையில் ருசிகரம் 119 முறை விதி மீறியவருக்கு அபராதம்

Published On 2022-06-27 08:01 GMT   |   Update On 2022-06-27 08:01 GMT
  • போலீசார் வாகன தணிக்கையில் தப்பினாலும் சேலத்தில் உள்ள தனியங்கி காமிராக்கள் மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும்.
  • அதன்படி விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 15 நாளில் 10ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சேலம்:

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் கோடா உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன தணிக்கை செய்து வருகிறார்கள்.

10 ஆயிரம் வழக்கு

அதன்படி விதி மீறலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 15 நாளில் 10ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே ஆன்லைனில் அபராதம் செலுத்தாத 1500 பேரிடம் அபராதம் வசூல் செய்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைத்தது.

சேலம் 5 ரோடு சந்திப்பில் விதி மீறி தொடர்ந்து வாகனம் இயக்கியதால் 119 முறை அபராதம் விதிக்கப்பட்ட நபர் அதனை செலுத்தாமல் இருந்தார். அவரை போலீசார் வாகன தணிக்கையின் போது பிடித்து 12 ஆயிரத்து 900 ரூபாயை வசூலித்தனர்.

அதிக அபராதம்

அந்த நபர் தமிழகத்திலேயே அபராதமாக அதிக தொகை செலுத்திய 2-வது நபர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் விதி மீறுவோர் போலீசார் வாகன தணிக்கையில் தப்பினாலும் சேலத்தில் உள்ள தனியங்கி காமிரா க்கள் மூலம் ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும்.

இதனால் வாகன ஓட்டிகள் எப்போதும் போக்குவரத்து விதிமுறை–களை கடை பிடித்து ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News