உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி சக்திமலை கோவிலில் பிரதோஷம்
- அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
- பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சக்திமலை முருகன் கோவிலில் பிரதோஷ நாளான நேற்று லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்திதேவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும் பிரதோஷ சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.