உள்ளூர் செய்திகள்

தமிழகத்திலிருந்து 25 பா.ஜ.க. எம்.பி.க்களை அனுப்பும் வகையில் கட்சிப்பணிகள் தீவிரம்

Published On 2022-07-17 08:18 GMT   |   Update On 2022-07-17 08:18 GMT
  • தமிழகத்திலிருந்து 25 பா.ஜ.க. எம்.பி.க்களை அனுப்பும் வகையில் கட்சிப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
  • தமிழக அரசின் ஒத்துழைப்புடன் இங்கு பயங்கரவாதிகளின் வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது.

ராமநாதபுரம்

பா. ஜனதா தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 25 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பும் வகையில் பா. ஜனதா கட்சியில் பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது.தமிழக பா. ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரையின் பேரில், பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் சென்று கடந்த 8 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு அளித்துள்ள திட்டங்களையும் சலுகைகளையும் விளக்கி வருகிறோம்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தி.மு.க. அரசில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சி என்று எங்களை பார்க்க வேண்டும். எதிரி கட்சியாக பார்த்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு பா. ஜனதா அரசு செய்து வரும் நலத்திட்டங்களை எங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது கொண்டு சேர்ப்போம்.

தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை மத்திய அரசு கண்காணித்து வருகின்றது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பா. ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளை தடை செய்வதற்கு மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.

தமிழக அரசின் ஒத்துழைப்புடன் இங்கு பயங்கரவாதிகளின் வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது. இதை உடனடியாக நிறுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் மாநில அளவில் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News