- கழிவு பொருட்களில் இருந்து கலைபொருட்கள் தயாரிக்கும் போட்டி நடந்தது.
- ஆசிரியை சுகந்தி ஜெனிபா, கற்பக வள்ளி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நடத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் மாணவ-ஆசிரியகளுக் டையேயான கழிவு பொருட்களில் இருந்து கலைநயமிக்க பொருட்களை தயாரிக்கும் போட்டி கல்லூரி இயக்குநர் கேபிரியல் வழிகாட்டு தலின்படி ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு போட்டிகளை கல்லூரி தாளாளர் மனோகரன் மார்டின் தொடங்கி வைத் தார். கல்லூரி முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாணவ- மாணவிகள் அனைவரும் கழிவு பொருட்களில் இருந்து பல விதமான கலை நயமிக்க பொருட்களையும், கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும்போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான கற்பித்தல் உபகரணங்களையும் செய்திருந்தனர்.
கழிவு பொருட்களை எவ்வாறு மறுபடியும் பயன்மிக்க பொருட்களாக மாற்றுவது? என்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தகைய போட்டிகள் நடத்தப்படு வதாக தெரிவித்தனர்.வெற்றி பெற்ற மாணவ- ஆசியர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த போட்டியினை ஆசிரியை சுகந்தி ஜெனிபா, கற்பக வள்ளி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நடத்தினர்.