ராமேசுவரத்தில் விநாயகர் சிலை விற்பனை மும்முரம்
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் விநாயகர் சிலை விற்பனை மும்முரம் நடந்தது.
- பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.
ராமேசுவரம்
நாடு முழுவதிலும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று சிலையை வைத்து வழிபாடு நடத்தி நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த நிலையில், ராமேசுவரத்தில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்திடும் வகையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வைக்கப் பட்டுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வியாபாரிகள் செந்தில் மற்றும் ராமன் ஆகியோர் 800 விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய கொண்டு வந்து பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.
கண்மாய் மணல் மூலம் தயாரிக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கும் போது மீன்களுக்கும், நீரின் தன்மை மாசுபடாமல் இருக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். வீடுகளில் வழிபாடு செய்திடும் வகையில் பல வர்ணங்களில் சிறிய அளவி லான சிலைகள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு உள்ளது.