உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பா.ஜனதா கட்சியினர் 'திடீர்' சாலை மறியல்

Published On 2023-04-23 09:08 GMT   |   Update On 2023-04-23 09:08 GMT
  • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பா.ஜனதா கட்சியினர் ‘திடீர்’ சாலை மறியல் நடத்தினர்.
  • சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா தலைவராக தரணி முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து மாவட்டத்தில் பா.ஜன தாவை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பா.ஜ.க. தலைவராக இருந்த கதிரவன் தூண்டுதலின் பேரில் சென்னை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் தரணி முருகேசனை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கூலிப்படையினர் தாக்கியதில் தரணி முரு கேசன் மேலாளர் கணேசன் என்பவர் படுகாய மடைந்தார். அவர் ராமநாத புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரை ஆஸ்பத்திரி நிர்வாகம் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய நடவ டிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் தன்னை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபற்றி அறிந்த பா.ஜ.க.வினர் தரணி முருகேசன் தலைமையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் இது தொடர்பாக உரிய நடடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிடுங் கள் என்று கேட்டுக்கொண்ட னர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து டீனை மிரட்டியதால் அவர் கணேசனை டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News