உள்ளூர் செய்திகள்

கடுமையான பனிபொழிவால் புதிய வகை பூஞ்சை நோயால் நெற்பயிர்கள் பாதிப்பு

Published On 2023-01-20 09:41 GMT   |   Update On 2023-01-20 09:41 GMT
  • விவசாயிகள் வேதனை
  • நெல்லின் விலை உயராமல் உள்ளதாக புகார்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் மற்றும் காவேரிப்பாக்கம் அது சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை நம்பி உள்ளனர்.

பகுதியில் அதிகமாக நெற்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சில நெல் ரகங்களில் அதிகமான மூடுபனி காரணமாக நெற்பயிரில் சிவப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

தனால் நெற் பயிர்கள் வளர்ச்சி காணாமல் குன்றி காணப்படுகிறது. மேலும் பச்சையாக இல்லாமல் சிவப்பு ரகமாக காணப்படுகிறது.

இந்த புதிய வகை நோய் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே நெற்பயிர்களை சாகுபடி செய்வதற்கு உண்டான உர செலவு இடு பொருட்கள் செலவுகள் அதிகமாக உள்ளதாகவும் அதற்கேற்றார் போல் நெல்லின் விலை உயராமல் குறைவாக உள்ளதாகும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய நோய் தாக்கத்தால் மேலும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

Tags:    

Similar News