- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- மாவட்ட வனத்துறை சார்பில் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மாவட்ட வனத்துறை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க சாலிடரிடாட் மற்றும் ஸ்விட்ச் ஆசியா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 600 மரக்கன்றுகள் நடுதல் தொடக்க நிகழ்ச்சி ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், நிர்வாக இயக்குநர் ஜபருல்லா,பொது மேலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலிடரிடாட் அமைப்பின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிபுணர் எலியோனோரா அவாக்லியானோ கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
இதில் சுற்றுச்சூழல் பொறியாளர்கள். ரவிசந்திரன்,சந்திரசேகர், மாவட்ட வனத்துறை அலுவலர் கலாநிதி, வனச்சரக அலுவலர் சரவணபாபு , சாலிடரிடாட் மேலாளர் சுரில் பன்னிர்செல்வம் மற்றும் அதிகாரிகள், தொழில திபர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.