ரெயிலில் பயணி தவறவிட்ட கைசெயின் மீட்டு ஒப்படைப்பு
- ெரயிலில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார்.
- ெரயில் பெட்டியிலே தவறவிட்டது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை ரெயில் நகரை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 34). இவர் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார். ஏ.சி கோச்சில் பயணம் செய்தார்.
பின்னர் தஞ்சாவூர் வந்து இறங்கி வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது தான் அணிந்திருந்த ஒன்றரை பவுன் கை செயின் காணாதது கண்டு அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்த அவர் தஞ்சை ெரயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ெரயில் பெட்டியிலே தவறவிட்டது தெரியவந்தது.
இந்த கைச்செயினை தஞ்சை பெண் பயணி ஒருவரின் சகோதரர் எடுத்து அதனை போட்டோ பிடித்து வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருப்பு பாதை போலீஸ் டி.எஸ்.பி. பிரபாகரனின் அறிவுறுத்தல் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல்,
சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் அந்த செயினை மீட்டு ராகேசிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செயின் கிடைக்க காரணமாக இருந்த நபரையும் பாராட்டினர்.