உள்ளூர் செய்திகள்

கோவை தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியது

Published On 2023-08-06 09:18 GMT   |   Update On 2023-08-06 09:18 GMT
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
  • இணையத்தில் பதிந்தால் வீட்டுக்கே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்கு தயராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் தேசியக்கொடியின் விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை களைகட்டி உள்ளது.

கோவையில் ஆர்.எஸ்.புரம், கூட்ஷெட் ரோடு ஆகிய பகுதிகளில் தலைமை தபால் நிலையங்கள் உள்ளன. இதுதவிர மாவட்டம் முழுவதும் 80 துணை அஞ்சல் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

கோவையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை நேற்று தொடங்கியது.

அங்கு ஒரு கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.எனவே அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு திரண்டு வந்து தேசியக்கொடிகளை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து கோவை அஞ்சலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவையில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆண்டுதோறும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் விற்பனையை தொடங்கி உள்ளோம்.பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியும் தேசியக்கொடி வாங்குவதற்காக இ-போஸ்ட் வசதியை பயன்படுத்தலாம்.

இதற்காக அவர்கள் விண்ணப்பித்தால் தபால் அலுவலக ஊழியர்களே நேரில் வந்து தேசியக்கொடியை ஒப்படைப்பர்.

கோவையில் உள்ள தபால் அலுவலகங்களில் விற்கப்படும் தேசியக்கொடிக்கு மாவட்ட அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே நடப்பாண்டு சுமார் 40 ஆயிரம் தேசியக்கொடிகளை விற்பனை செய்வது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News