உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த காட்டெருமை4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
- காப்பி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை காட்டெருமை ஒன்று தவறி விழுந்து விட்டது.
- வனத்துறை ஊழியர்கள், காட்டெருமையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம ஏற்காடு டவுன் பகுதிக்கு அருகில் உள்ள தனியா ருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை காட்டெ ருமை ஒன்று தவறி விழுந்து விட்டது. மேலே வர வழி யில்லாமல் தண்ணீரில் தத்தளித்து.இதை பார்த்த காப்பி தோட்ட பணியாளர்கள் வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், காட்டெருமையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கிணற்றின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, காட்டெருமை மேலே வர வழி ஏற்படுத்தினர். பின்னர் இதை பயன்படுத்தி காட்டெருமை மேலே வந்தது. வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்கு விரட்டினர்.