திருச்செங்கோட்டில் சேலம் மண்டல ஓய்வூதியதாரர்கள் மாநாடு
- தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி - 1995 சேலம் மண்டல ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை மாநாடு நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- மத்திய அரசு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்காலமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி - 1995 சேலம் மண்டல ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை மாநாடு நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாடு வரவேற்பு கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஐசிஎல் மாணிக்கம் வரவேற்றார். மாநில செயலாளர் பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் . அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு பொருளாளர் மோகனன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மத்திய அரசு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்காலமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கமுட்டேசன், ஆண்டு உயர்வு, சர்வீஸ் வெயிட்டேஜ் இஎஸ்ஐ போன்ற சட்ட சலுகைகளை அமுலாக்க வேண்டும். கேரளா போல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் சேலம் மண்டல கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.