உள்ளூர் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை-அடவிநயினார் அணை நீர்மட்டம் 117 அடியை எட்டியது

Published On 2023-10-24 08:47 GMT   |   Update On 2023-10-24 08:47 GMT
  • பாபநாசம் அணையில் 84.80 அடி நீர் இருப்பு உள்ளது.
  • அதிகபட்சமாக சிவகிரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.

நெல்லை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அணை பகுதிகளிலும், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று நாங்குநேரி, சேரன்மகாதேவி ஆகிய இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நாங்குநேரி யில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

அணை பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. பாபநாசம் மற்றும் சேர்வ லாறு அணை பகுதிக ளுக்கு வினாடிக்கு 301 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 504 கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது.

பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.80 அடி நீர் இருப்பு உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 96.62 அடி நீர் உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.65 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 48.25 அடியாகவும் உள்ளது. 52.50 அடியாக உள்ள அந்த அணை நிரம்ப இன்னும் 4 அடி நீரே தேவை. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் அந்த அணை நிரம்பிவிடும்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடு முறை என்பதால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வரு கிறது. வெளி மாவட்டங் களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்துள்ளதால் அருவிக்கரை கள் நிரம்பி காணப்படுகிறது.

மாவட்டத்தில் செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானமும் மேக மூட்டத்துடன் காணப்படு வதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக சிவகிரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதி களை பொறுத்தவரை கருப்பாநதி மற்றும் அடவி நயினார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது.

அந்த அணையில் 63.5 மில்லிமீட்டர் மழை கொட்டி யது. அடவிநயினாரில் 28 மில்லிமீட்டர் மழை பதிவாகி யது. 72.10 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. இதேபோல் 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 15 அடி நீரே தேவை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News