உள்ளூர் செய்திகள்

சாதி சான்றிதழ் வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் பேராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் சாதி சான்றிதழ் வேண்டி போராட்டம்

Published On 2022-11-21 09:51 GMT   |   Update On 2022-11-21 09:51 GMT
  • பள்ளி மாணவர்களுக்கு இது வரை சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியிலேயே தடைபடுகிறது.
  • எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ்வழங்கிட கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் சாதி சான்றிதழ் வேண்டி தமிழக ஆதியன் பழங்கு–டியின மக்கள் நலச்சங்க மாநில தலைவர் வீரைய்யன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 35 ஆதியன் பழங்குடி இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இது வரை சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியிலேயே தடை படுகிறது.

பட்டுகோட்டை மேல ஓட்டங்காடுமற்றும் துறைவிக்காடு, சுக்கிர ன்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளவ–ர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க–ப்பட்டுள்ளது. இது போல் எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ்வழங்கிட கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News