உள்ளூர் செய்திகள்
செந்தில்பாலாஜி வழக்கு 15-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- 10 மாதங்களுக்கும் மேலாக செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார்.
- அடுத்த வாரம் விசாரணை நடைபெறும்
புதுடெல்லி:
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது.
இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் செந்தில்பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அப்போது விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதற்கு செந்தில்பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் வழக்கை ஒத்திவைக்க யாரும் கேட்ட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.