உள்ளூர் செய்திகள்
100 கலைஞர் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்க வேண்டும்- சிவசேனா கட்சி கோரிக்கை
- உலகிலேயே முதன் முதலாக யாருக்கும் தோன்றாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர்.
- அடுத்த நூற்றாண்டில் உலகிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாய் சமத்துவபுரங்கள் அமைத்திட வேண்டும்.
சென்னை:
சிவசேனா கட்சி (யுபிடி) மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகிலேயே முதன் முதலாக யாருக்கும் தோன்றாத சமத்துவ சமுதாயத்தை சொல்லிலே மட்டும் இல்லாமல், எழுத்திலே மட்டும் இல்லாமல் செயலிழை செய்து காட்டி சாதித்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு தினத்தை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 100 சமத்துவ புரங்களை அமைத்து அதற்கு கலைஞர் சமத்துவபுரம் என்று பெயர் சூட்டி, கலைஞர் சமத்துவ படங்கள், அனைத்து புதிய தலைமுறையை புதிய பொருளாதார ஏற்றத்தை, புதிய மாற்றத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உருவாக்கி, அடுத்த நூற்றாண்டில் உலகிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாய் அமைந்திட 100 கலைஞர் நூற்றாண்டு சமத்துவபுரங்கள் அமைத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.