குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.
மானாமதுரை
மானாமதுரை நகராட்சி சார்பில் தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புரவு ஆய்வாளர் பாண்டிசெல்வம் தலைமை தாங்கி. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள். அதை எவ்வாறு கையாள வேண்டும். குப்பைகளை எவ்வாறு தரம் பிரிக்க வேண்டும். குறிப்பாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து, எவ்வாறு வழங்கிட வேண்டும், குப்பைகள் மூலம் உரங்கள் தயாரித்து, இந்த வளம்மீட்பு பூங்காவில் வளர்க்கப்பட்ட காய், கனிகள், முலிகை செடிகள், பூக்கள் பற்றி விளக்கி பேசினார். பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்தி ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.