சிவகிரி - தேவிபட்டணம் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
- யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
சிவகிரி:
சிவகிரி குமாரபுரம், தேவிபட்டணம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தேவிபட்டணத்தில் இருந்து குமாரபுரம் வழியாக சிவகிரி செல்லும் தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை தேவிபட்டணம் பேருந்து நிறுத்தம் தென்புறம் உள்ள பிள்ளையார் கோவில் அருகே யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தேவிபட்ட ணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை முனியராஜ், கிளை செயலாளர் முருகன், பஞ்சாயத்து துணைத் தலைவர் மாடக் கண்ணு, அனைத்து வார்டு கவுன்சிலர்கள், ஜெய பிரகாஷ், துரைராஜ், காளி ராஜ், மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.