உள்ளூர் செய்திகள்

பொன்னேரி-மீஞ்சூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

Published On 2022-06-08 08:31 GMT   |   Update On 2022-06-08 08:31 GMT
  • மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் நெற்பயிரின் பாதிப்பு குறித்து வயல்வெளிக்கு சென்று ஆய்வு.
  • வேரின் வளர்ச்சி தடைபட்டும், நெற் பயிர் காய்ந்தும் வருகின்றன.

பொன்னேரி:

மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் உள்ள மெதுர், சிறுலபாக்கம், குமரன்சேரி அனுப்பம்பட்டு,சிறுவாக்கம் கோளூர்,வேலூர், தத்தை மஞ்சி, சிறுவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் வயலில் தேங்கி உள்ள தண்ணீரில் அதிகஅளவு பச்சை பாசி படர்ந்து வருகிறது. இதனால் வேரின் வளர்ச்சி தடைபட்டும், நெற் பயிர் காய்ந்தும் வருகின்றன.

இந்த பச்சை பாசியால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் அதிகாரிகள் நெற்பயிரின் பாதிப்பு குறித்து வயல்வெளிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது டில்லி குமார், விவசாயிகளிடம் கூறும்போது, ஏக்கருக்கு 2 கிலோ காப்பர் சல்பேட் உரத்திணை 10 கிலோ மணலுடன் சேர்த்து சீராக தூவினால் பச்சை பாசி வளர்ச்சி தடைப்பட்டு பயிர் சீராக செழித்து வளரும். இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News