உள்ளூர் செய்திகள்

நீலகிரி மலைப்பூண்டு விலை திடீர் வீழ்ச்சி- உற்பத்தியாளர்கள் கவலை

Published On 2024-11-23 09:38 GMT   |   Update On 2024-11-23 09:38 GMT
  • நீலகிரி மாவட்ட பூண்டு அதிக மருத்துவ தன்மை கொண்டதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
  • விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி உற்பத்தி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

இதில் நீலகிரியில் விளையும் மலைப்பூண்டு மருத்துவ குணமும் அதிக கார தன்மையும் கொண்டதாகும்.

கடந்த வாரம் வரை மத்திய பிரதேசம, குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து இல்லாததால் நீலகிரி மலைப்பூண்டின் விலை மும்மடங்கு உயர்ந்து கிலோ ரூ.600 வரை கொள்முதல் விலையாக கிடைத்தது. இதனால் மலை மாவட்ட விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டி வந்தனர்.

தற்போது மீண்டும் வெளிமாநில பூண்டு மேட்டுப்பாளையம் மண்டிக்கு வர தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இமாச்சல் பிரதேச பூண்டு அதிகளவில் வர தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக நாளுக்கு நாள் ஏலத்தில் நீலகிரி பூண்டின் விலை வீழ்ச்சி அடைந்து பூண்டு கொள்முதல் மண்டிகளில் விலை பாதியாக குறைந்த ரூ.350 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட பூண்டு அதிக மருத்துவ தன்மை கொண்டதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

மாவட்டத்தில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்துறை, கேர் கம்பை, கப்பட்டி மற்றும் கட்டபெட்டு, தொட்டன்னி பகுதிகளில் தற்போது பூண்டு அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News