உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 தேர்வு முடிவு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில்-8648 பேரும், மாணவிகள் 9760 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பயிலும் 10061 மாணவர்கள், 10642 மாணவிகள் என மொத்தம் 20703 பேர் எழுதினர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 முடிவுகள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களில்-8648 பேரும், மாணவிகள் 9760 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 18498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 88.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த 1.5 சதவீதம் பேர் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.