வேல்ஸ் பல்கலை கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
- 75 மாணவர்களுக்கு தங்க பதக்கத்தையும் 169 மாணவர்களுக்கு பி.எச்.டி. பட்டத்தையும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
- 4305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
சென்னை:
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
விழாவில் 75 மாணவர்களுக்கு தங்க பதக்கத்தையும் 169 மாணவர்களுக்கு பி.எச்.டி. பட்டத்தையும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். மேலும் 4305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் பிற துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளான ஆர்.எம்.கே. கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், ப்ரஸ் ஒர்க் நிறுவனத்தின் உரிமையாளர் கிரிஷ் மாத்ரு பூதம், கோவை இந்துஸ்தான் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை பேராசிரியர் டாக்டர் எம். ராமலிங்கம், இந்திய தடகள கூட்டமைப்பின் துணை தலைவரும் இந்திய தடகள வீராங்கனையுமான அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில் வேல்ஸ் பல்கலை கழக நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், இணை வேந்தர் முனைவர் ஆ. ஜோதி முருகன், இணை வேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் குழு மத்தின் துணை தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ், துணைவேந்தர் முனைவர் ஸ்ரீமன் நாராயணன், இணை துணை வேந்தர் முனைவர் மு. பாஸ்கரன், பதிவாளர் முனைவர் பெ. சரவணன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் அ. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், புல முதல்வர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.