உள்ளூர் செய்திகள்
கூண்டில் பிடிபட்ட கரடி களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது
- முத்தூர் கிராமத்தில் கரடி அட்டகாசம் செய்து வந்தது.
- கூண்டில் சிக்கிய கரடியை வனப்பகுதியில் விட்டனர்.
களக்காடு:
நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி அட்டகாசம் செய்து வந்தது. அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி முத்தூரில் சுற்றித்திரிந்த கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்த கூண்டில் நேற்று கரடி சிக்கியது.
கூண்டில் சிக்கிய கரடியை நெல்லை வனச்சரகர் சரவணகுமார், வனவர் அழகர்சாமி ஆகியோரின் தலைமையிலான வனத்துறையை சார்ந்த குழுவும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவும் இணைந்து கரடியை களக்காடு சரணாலயம் முத்தலாறு வனப்பகுதியில் உதவி உயிரின பாதுகாவலர் பயிற்சி மற்றும் களக்காடு வனப்பணியாளர்களின் முன்னிலையில் பாதுகாப்பாக விடப்பட்டது.