- மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 23-வது கோடை விழா இன்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கோடை விழா நடந்த வளாகத்தில் வண்ண, வண்ண மலர்கள் ெகாண்ட தோரணங்கள், மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் கொண்டு அனைவரையும் கண்கவரும் வகையில் வடிவமை க்கப்பட்டு இருந்தது.
ேமலும் முக்கிய சந்திப்பு இடங்களில் வரவேற்பு வளைவுகள், நிகழ்ச்சிகள் விவரம் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
கோடை விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்து. காவல்துறையினர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்தனர்.
மேலும் போலீசார் மோப்ப நாய்களின் நிகழ்ச்சி மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சாகச விழிப்புணர்வு நிகழச்சிகளும் நடந்தது.
வேளாண்மை துறை மற்றும் தோட்டக்க லைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மலர் மற்றும் காய்கறி கண்காட்சி அணைவரையும் கவர்ந்து இழுத்தது. ஜவ்வாதுமலையில் விளையும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் அடங்கிய விற்பனை சந்தையும் அமைக்கப்பட்டு இருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடக்கும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் தொடக்கமாக மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையினை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, சமூகநலத்துறை, மகளிர் திட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை சார்பில் பெண்களுக்கான கோலப் போட்டி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு என தனித்தனியே விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
கலை பண்பாட்டுத்துறை. சுற்றுலாத்துறை, பள்ளி கல்வித் துறை மூலமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகள், மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள். பாடல்கள், விளையா ட்டுகள், உணவு வகைகள் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
கண்காட்சி அரங்கங்களில் அரசு திட்டங்கள் குறித்த விளக்க மாதிரிகள் மற்றும் குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மேலும், துறை சார்ந்த அரசு திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க கையேடுகள் மற்றும்துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இன்று நடந்த கோடை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டதால் அந்த பகுதியில் விழாக்கோலம் பூண்டது.
இன்று காலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளத்தாளங்கள், பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ் 6000 பயனாளிகளுக்கு ரூ. 500 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோடை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் 86 ஆயிரத்து 708 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள், செய்து முடிக்கப்பட்ட 583 பணிகளின் திறப்பு விழா மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள 380 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா என மொத்தம் ரூ.580.68 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் வருகையால் திருவண்ணாமலையில் தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர்.