உள்ளூர் செய்திகள்

ஜவ்வாதுமலையில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்ட காட்சி.

ஜவ்வாது மலையில் கோடை விழா மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

Published On 2023-07-20 09:26 GMT   |   Update On 2023-07-20 09:26 GMT
  • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
  • கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனையொட்டி மலர் கண்காட்சி, காய்கறிகளால் சிறப்பு அலங்காரங்களுடன் அமைக் கப்பட்டிருந்தது.

விளையாட்டு போட்டிகளும் மலை வாழ் மக்களுக்கு நடத்தப்பட்டன.

நேற்றுடன் விழா நிறைவடைந்து பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.

அதன்படி நேற்று நடந்த விழாவுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கலெக்டர் தனலட்சுமி வரவேற்றார்.

இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரங்குகள் அமைத்த பல்வேறு அரசு துறை களுக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் தான் ஜவ்வாது மலை வளர்ச்சி பெற்றது. இது வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.

முதன் முதலாக 26 ஆண்டுகளுக்கு முன் ஜவ்வாது மலையில் கோடை விழா ஆரம்பித்தது தி.மு.க.ஆட்சியில்தான். மலை வாழ் மக்களுக்கு சாலை வசதி, மினி பஸ் வசதி குடிநீர் வசதி போன்றவை தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான்" என்று கூறினார்.

கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-

கோடைவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 4 நாட்கள் நடக்கும் இந்த கோடை விழாவில் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விழாவில் மாநில தட கள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுலாத்துறை அலுவலர் அஸ்வினி நன்றி கூறினார்.

Tags:    

Similar News