ஜோலார்பேட்டையில் மயான கொள்ளை விழா
- பால் அபிஷேகம் செய்யப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் கிராமம் தேவலேரிபுரம் வட்டத்தில் ஸ்ரீ சுடலை மகாகாளியம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
மதியம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் 2-ம் நாள் சிவராத்திரி விரதம் இருந்தவர்களுக்கு சிவ பூஜை மாவிளக்கு எடுத்தல் தானிய வகைகளான துவரை அவரை கொள்ளு போன்ற பொருட்களை மகாகாளி அம்மனுக்கு படையல் இடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று மயான கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
மகா காளியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூக்காரங்க ஊர்வலம் மகா காளியம்மன் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
விழாவிற்கு நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.