கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கவிழ்ந்து 20 பேர் படுகாயம்
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் பகு தியை சேர்ந்தவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆடி. கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருந்து நேற்று ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு மினி லாரியில் சென்றனர்.
குன்னத்தூரை சேர்ந்த சின்னராஜ் (வயது 55) மினி லாரியை ஓட்டிச் சென் றார்.
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, வேண்டுதலை நிறை வேற்றிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். ஏலகிரி மலை 3-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது மினி லாரி நிலைதடு மாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் மினி லாரியில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 3 ஆம்புலன்ஸ் கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக் காக திருப்பத்தூர் அரசு மருத் துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை மேற் கொண்டனர்.
மினி லாரியை ஓட்டி சென்ற டிரைவரும், உரிமையாளருமான சின்னராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் தலைமறைவான டிரைவர் சின்னராஜை இன்று காலை ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.