லாரி விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
- மின் கம்பம், அடிபம்பு மீது வேகமாக மோதியது
- போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்
ஆலங்காயம்:
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 42) என்பவர் ஓட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று கொண்டி ருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிக்கெட்டு ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் அடிபம்பு மீது வேகமாக மோதியது.
இதில் மின் கம்பம் மற்றும் பம்பு முற்றிலுமாக சேத மானது. இந்த விபத்தில் டிரைவர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதி மக்கள் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வாணிய ம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த வாணி யம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி விட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.
விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.