உள்ளூர் செய்திகள்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1000 மதுபாட்டில்கள் தரையில் ஊற்றி அழிப்பு
- நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1069 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகம் பின்புறம் கலால் பிரிவு வட்டாட்சியர் ராகவி முன்னிலையில் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் கென்னடி தலைமையிலான காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர். அழிக்கப்பட்ட மது பாட்டில்களில் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.