- ரெயில் நிலையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- 35க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுனர்.
திருப்பூர்:
திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ெரயில்வே திருப்பூர் ரெயில் நிலையம் இணைந்து போதை அரக்கன் போல் வேடமிட்டு இன்று திருப்பூர் ெரயில் நிலையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் ரெயில் நிலைய துணை மேலாளர் சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
துணை மேலாளர் பேசுகையில்,போதை பழக்கத்தைத் தடுப்பதிலும், போதைக்கு அடிமையானவர்களை மீட்பதிலும் யோகாவும் தியானமும் பயனளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதை முற்றிலும் நிறுத்த வேண்டும் .
போதை அதற்கு அடிமையானவர்களையும், அவர்களை சுற்றியுள்ள மக்களையும் பாதிக்கும்.போதையை ஒழித்து பாதையை வளர்ப்போம் என்று பேசினார். வணிக ஆய்வாளர் ராம்நாத், ரெயில்வே ஊழியர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.
மாணவச் செயலர்கள் சுந்தரம், விஜய், ராஜபிரபு, காமராஜ், ஜெயசந்திரன், விக்னேஷ், மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 35க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை அரக்கன் போல் வேடமிட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், உறுதிமொழி எடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.