உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

கோழி தீவனத்துக்கு பயன்படுத்தும் மக்காச்சோளத்துக்கு 1 சதவீத செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் - உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை

Published On 2023-04-30 05:32 GMT   |   Update On 2023-04-30 05:32 GMT
  • வரி விதிப்பால் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உள்ளது.
  • உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 90 சதவீதம் கோழித் தீவனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

பல்லடம்:

கோழி தீவனத்துக்குப் பயன்படுத்தும் மக்காச்சோளத்துக்கு 1சதவீத செஸ் வரியை ரத்து செய்ய அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரும்பான்மையாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனா். உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 90 சதவீதம் கோழித் தீவனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மக்காச்சோளத்தை விற்பனை செய்யும்போது கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் 1சதவீதம் செஸ் வரி கட்ட கட்டாயப்படுத்தப்படுகிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இந்த வரி விதிப்பு இல்லை.

இந்த வரி விதிப்பால் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே இடுபொருள்கள் விலை உயா்வாலும் கூலி உயா்வாலும் கஷ்டத்தில் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மேலும் சிரமத்தையும் கஷ்டத்தையும் இந்த வரி விதிப்பு கொடுக்கிறது.

விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறையோடு செயலாற்றி வரும் தாங்கள் விவசாயிகளுக்கும், கோழி வளா்ப்பு பண்ணையாளா்களுக்கும் உதவும் வகையில் மேற்கண்ட கோவை, திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் நடைமுறையில் உள்ள 1சதவீதம் செஸ் வரியை ரத்து செய்து உதவ வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News